தமிழ் முகப்பு

English

“ஆவியானவரால் நடத்தப்படும் ஆலோசனை” க்கு வருகை தந்தமைக்கு நன்றி! 

“ஆவியானவரால் நடத்தப்படும் ஆலோசனை” என்பது

நற்செய்தி: தேவனிடத்தில் தன்னை தாழ்த்துகிறவர்களுக்கு நற்செய்தியாகவும்,
காயம் கட்டுதல்: இருதயம் நொறுங்குன்டவர்களுக்கு காயம்கட்டவும்.
விடுதலை: கட்டுகளிலும், பாவங்களிலும், ஆக்கினைகளும், குற்றவுனர்ச்சிகளிலும், சிறைப்பட்டவர்களுக்கும் விடுதலையை கூறவும்,
சுதந்திரம்: இருளில் அகப்பட்டு கைதானவர்களுக்கு சுதந்திரமும்,
அறிவிப்பு: கர்த்தருடைய அநுக்கிரகம் வருஷங்களையும் நீதியை சரி கட்டும் நாளை அறிவிக்கவும்.
ஆறுதல்: துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் அளிக்கவும்,
அலங்காரம்: சாம்பலுக்கு பதிலாக அலங்காரமான மகுடத்தையும்,
ஆனந்ததைலம்: துயரத்திற்க்கு பதிலாக ஆனந்ததைலத்தையும்,
துதியின் உடை: ஒடுங்கின ஆவிக்கு பதிலாக துதியின் உடையையும்,

கர்த்தராகிய தேவனாகிய “யெசுவா ஹா மஷியாக்” இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காக

மாற்றப்பட: நீதியின் விருச்சங்களாக நாட்டப்பட (மாற்றப்படும்) இடமாகும்.

“ஆவியானவரால் நடத்தப்படும் ஆலோசனை” ஏன், ஏதற்காக?

நான் யார், தேவன் யார் என்பதை அறிந்துகொள்வது தான் வெற்றிகறமான வாழ்க்கைமுறைக்கு திறவுகோல்.
நான் யார்? கடவுள் யார்? என்பதை நாம் நம்முடைய கண்ணோட்டத்தில் தான் அறிந்திருக்கிறோம்.
அதனை தேவனுடைய கண்ணோட்டத்தில் பார்க்காமல் போனது தான் நம் வாழ்வில், எல்லா தீமைக்கு வேராக இருக்கிறது.

  • தேவனுடைய குமாரனான ஆதாம், தேவனுடைய சாயலகவும், அவருடைய ரூபத்தின்ப்படியாகவும் படைக்கப்பட்டார்கள். (ஆதியாகமம் 1:26-27) (லூக்கா 3:38).
  • ஆதாம்-ஏவாள் தாங்கள் யார் என்பதை அறியவில்லை, தேவன் யார் என்பதையும் அறிந்திருக்கவில்லை.
  • நீங்கள் விலக்கப்பட்ட கனியை புசித்தால் தேவனைப்போல இருப்பீர்கள் என்று சர்ப்பம் ஏவாளிடம் சொன்னது. (ஆதியாகமம் 3:5)
  • ஆதாமும் ஏவாளும் படைத்த தேவனை நம்பாமல், பிசாசை நம்பினதினால் தேவனுடைய குமாரன் என்ற உறவை இழந்து பிசாசின் அடிமைகளாக ஆனார்கள்.

நாம்  தேவனையும் தேவனுடைய வழியையும் அறியாமல் இருப்போமானால், பிசாசுக்கு சத்தியத்தை திறித்து, பொய்யை மெய்யாக திறித்துப்போட எளிதாகிவிடும்.
சாத்தான் எல்லா பொய்யிற்க்கும் தகப்பனாக இருக்கிறான். (யோவான் 8:44).

கர்த்தரும் இரட்சகருமான, இயேசுவின் கட்டளைகளை பின்பற்றவும் கிறிஸ்து இயேசுவுக்குள் சகோதர சகோதரிகளோடு அருமையான ஐக்கியம் கொள்ளவும் இங்கு உங்களை பங்கு கொள்ள  அழைக்கிறோம்.

பிசாசின் பொய்யை இனம் கண்டு சத்தியத்தை அதாவது இயேசுவை கண்டடைந்து வெற்றிகறமான வாழ்வை பரிபூரனமாக வாழ்ந்து இருப்பீர்கள்

சரீரத்திலோ அல்லது மனதிலோ அதாவது அது நோயினாலோ, வியாதியினாலோ, அடிமைத்தனத்திலோ, பிசாசின் தாக்கத்தினாலோ வாதிக்கப்படுகிறீரகளானால், உங்களுக்கு வழிகாட்டவும், அதிலிருந்து மீள உதவி செய்யவும் எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள். 

நாங்கள் இங்கு ஓர் அணியாக, இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக, தேவனால் அபிஷேகிக்கப்பட்டு இயேசுவை விசுவாசிக்கும் அனைவருக்கும் நோயிலிருந்து குணமடையவும் விடுதலையடையவும் அனுப்பப்பட்டிருக்கிறோம்.

இது ஒரு இலவசமான அலோசனை சேவை எனபதை அறிந்துக்கொள்ளவும் அதாவது அலோசனை அமர்வுக்காக கட்டணம் என்று ஓன்றும் கிடையாது.

நோய் குணப்படுத்தவும் விடுதலை அடையச்செய்யவும், தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு வல்லமைகளையும் அதிகாரங்களையும் அருளி இலவசமாக செய்ய கட்டளையிட்டார்.

மத்தேயு 10:8
8. வியாதியுள்ளவர்களைச் சொஸ்த்மாக்குங்கள், குஷ்டரோகிகளை சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளை துரத்துங்கள், இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.

குறிப்பு:

  • அலோசனை அமர்வுகள் நியமனம் செய்ய மின்னஞ்சல் ( Email) மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.
  • ஆலோசகர் யார் மற்றும் நியமன தேதியும் நேரமும் மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும்.
  • தொடர்பு கொள்பவர்களின் வசதிக்கு ஏற்ப தோலைபேசி, மின்னஞ்சல், முகநூல், வாட்ஸேப், ஸ்கய்பு வாயிலாக தொடர்புக்கொள்ளலாம்.
Advertisements