வலைபதிவுகள், வாழ்வு குறிப்புகள்

அன்பு நேசிக்கப்பட வேண்டும்

English

product-image-28269179

 

தேவனாகிய யெசுவாவை நேசிப்பதே ஒரு ஆசீர்வாதம். நம்மை முழு இருதயத்தோடும்,ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் அவரையே நேசிக்க சொன்னதின் அர்த்தம் என்னவாக இருக்க முடியும்?

லூக்கா 10:27
27. அவன் பிரிதியுத்திரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து,…

யேகோவா தேவன் ஏன் இந்த கட்டளையிட்டார் என்று எப்பொழுதாவது சிந்தித்தது உண்டா?

சரி, தேவன் ஏன் கட்டளைகள் கொடுத்தார்? என்று பார்ப்போம்.

நீதியை” கற்றுக்கொள்வதற்காக அவர்களுக்கு (இஸ்ரயேலர்களுக்கு) கொடுத்தார். அதாவது பாவம் என்பது என்னவென்றும் மற்றும் எதை நாம் செய்யக்கூடாதது, எதை நாம் செய்ய வேண்டுயது என்றும் பரிசுத்தமானவரும், கனகச்சிதமானவருமான (பிழையற்றவருமானவருமான) தேவனுக்கு முன்பாக அவர்களை நிறுத்துவதற்காக கட்டளைகளை கொடுத்தார்.

அதை கடைப்பிடிப்பதற்கு, அவர்களுக்கு சிரமம் என்று கர்த்தர் அறிந்திருந்தார். அதனால் அவர்களுக்கு பாவநிவாரணபலியை அருளினார். இதெல்லாம் நம்மோடு ஒரு நல்ல உறவை ஏற்படுத்துவதற்காக தான்.

அவர் அந்த கட்டளைகளால் தன்னையே வெளிப்படுத்துகிறார் மேலும் எப்பொழுதும் அவர் நம்மை நேசிக்கிறார். அந்த கட்டளைகள் எல்லாம் நம்மை அடிமை படுத்துவதற்காக அல்ல ஆனால் நல்ல வாழ்வை வாழ கற்றுக்கொடுக்கும் ஒரு தகப்பனை போல தான்.

ஆனால் அற்புதமான தந்தை, தம்மை யெசுவா மூலமாக நேசிக்கவும், பிறரிடத்தில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவும் நம்மை பணிக்கிறார்.

இது நமது நன்மைக்காக தான். முழு ஆத்துமாவோடும், மனதோடும் மற்றும் பலத்தோடும் அவரை தேடும் போது, ஆதி நிலைக்கு நம்மில் நாமே உயருகிறோம். மேலும் பரலோக தந்தையுடன் இனைந்து இருக்கும் நிலையானது நம்மிடத்தில் இருக்கும் எதிர்மறையான உணர்வுகளை நம்மை விட்டு வெளியேற்றும்.

முழுமையான அன்பு பயத்தை புறம்பே தள்ளும்.

அவரை தேடுவதுதான் அவரை நேசிப்பது ஆகும்,. அவரது பிரசன்னத்தை அனுபவக்கும் போது நமது ஆதியில் படைத்த வடிவமைப்பிற்கு நம்மை இட்டுச் செல்லும். அதாவது நாம் தேவனது சாயலில் (குணாதிசயத்தில்) நாம் நடந்துக்கொள்வோம்.

நாம் அதே நிலையிலிருந்து தன்நலம் அற்ற அன்பு மற்றும் நிபந்தனையற்ற அன்புடன் நேசிப்போம்.

முன்னிலும் இன்னும் அதிகமான அன்புடன் மறுபடியும் பிதாவாகிய தேவனை நேசிப்போம்.

அவரை ரசித்து பாருங்கள், நீங்கள் மாற்றம் பெறுவீர்கள்.

Advertisements

1 thought on “அன்பு நேசிக்கப்பட வேண்டும்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s