வலைபதிவுகள், வாழ்வு குறிப்புகள்

குழப்பங்களை மேற்க்கொள்வது எப்படி?

English

Confusion

ஊங்களுடைய வடிவமைப்பை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்:

2 திமோத்தேயு 1:7

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

தெளிந்தபுத்தி என்றால்:

நியாயப்பிரகாரமாக, தாமாகவே சிந்திக்கவும், நியாயப்படுத்தவும், புரிந்து கொள்ளவும் திறமை கொண்டவர்.
ஒரு நல்ல மனது என்பது நல்ல, நேர்மறையான மற்றும் பகுத்தறியும் சிந்தினையை உடையது.

நாம் சக்தி வாய்ந்த மனதை வரமாக பெற்று இருக்கிறோம்.

இந்த சத்தியத்தை அறிந்து கொண்டு மேலும் அதை தியானிக்கும் போது நமது மனதிலிருந்து எதிர்மறையான சிந்தனையை நீக்குகிறது. சத்தியம் நம்மை விடுதலையாக்கும்.

சுய அழிவில் வாழ்வது:

ஓரு முடிவு எடுக்க முடியாதவர்கள், தான் முடிவு எடுத்ததை சந்தேகப்டுகிறவர்களாகவும் நிலையற்றவர்களாகவும் அலையும் மனதுடன் இருப்பவர்களை தெளிந்தப்புத்தியுடையவர்கள் என்று கூறமுடியாது.

தெளிந்தபுத்தி அடையவேண்டும் என்றால் நமக்கு பரிசுத்த ஆவியானவர் அத்தியாவசியம். ஏன் என்றால் நமது அனுபவம், விசேஷமாக கசப்பான அனுபவங்கள் நமது எண்ணங்களை வடிவமைக்கின்றன அதநிமித்தம் நமது வாய்ப்புகளையும் தீர்மானமெடுக்கும் திறனையும் பாதிக்கச்செய்கிறது.

பரிசுத்த ஆவியானவரால் உந்தப்பட்ட ஒருவர் எல்லாவற்றையும் தெளிவாக புரிந்துக்கொள்கிறார்.

பரிசுத்த ஆவியானவரால் உந்தப்படுவது / ஊக்கம் பெறுவது எப்படி?

 1. அவரை விசுவாசியுங்கள். அவரே நமது ஆதரவு அமைப்பு, நமது துணையாளர், தேற்றரவாளர்.
 2. பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து இருங்கள். இந்த “நிறைந்து இருப்பது” என்பது மதுபானத்தால் நிறைந்து இருப்பதற்கு ஒப்பிடப்படுகிறதை கவனியுங்கள். (எபேசியர் 5:18)
 3. வேதாகமத்தை அனுதினமும் ஒரு மணி நேரமாவது வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
  • சங்கீதம் 1:2
   “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். “
  • சங்கீத புஸ்தகம் நம்மை வேதத்தில் பிரியமாயிரிந்து என்று போதிக்கிறது. அதனால் அது என்னமோ பெரிய வேலை என்றும் அது போதகர்கள் போன்றவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது என்று நம்மில் அநேகர் நினைத்து அதில் உள்ள சூட்சமத்தை உணராமல் இருக்கிறோம்.
  • அனுதினமும் நீங்கள் ஒரு மணி நேரமாவது தியானம் அல்ல முதலில் வாசிக்க ஆரம்பியுங்கள். எந்த ஒரு விஷயமும் ஏழு நிமிடம் நாம் தொடர்ந்து செய்யும் போது, அது பழக்கமாகிறது என்று விஞ்ஞான ஆராய்ச்சி கூறுகிறது.
  • நீங்கள் வாசிக்க வாசிக்க அதை நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள், உடனே ஆவியானவர் உங்குளுடனே இருந்து அதை தியானம் செய்யவும் அதை நடைமுறைப் படுத்தவும் துணைசெய்வார். (1 யோவான் 2:27)

dove made out of water splasheswatersplash

 

பரிசுத்த ஆவியானவரால் நிறைவது எப்படி?

 1. பிதாவாகிய தேவனிடத்தில் பரிசுத்த ஆவியானவரை கேளுங்கள். பரிசுத்த ஆவியானவரை கேட்பவர்களுக்கு அளவில்லாமல் அருளப்படுவதாக நமக்கு வேதம் போதிக்கிறது. (லூக்கா 11:13)
 2. ஆராதனை பாடல்களினாலும், தொடர்ந்து தேவனை துதிக்கும் போதும், பாசுரங்களினாலும் (துதி பாடல்களினாலும்) மேலும் தேவன் நமக்கு என்ன அருளியிருக்கிறார் என்றும் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்றும் நம் சிந்தையை ஒருமுகப்படுத்தும்போது பெற்றுக்கொள்கிறோம். தேவப்பிரசன்னத்தில் நேரம் செலவழிக்கும் போதும், அவரை ரசிக்கும் போதும் நாம் அவரால் நிரப்பப்படுகிறோம்.
 3. தேவனையே ஒருமுகப்படுத்துவது தான் திறவுக்கோல், அதை அனுதின வழக்கமாக்கும் போது நம்மை மறுரூபப்படுத்தும்.

குழப்பங்களை தவிர்ப்பது எப்படி?

 1. நேர்மறையான எண்ணங்கள் மிகவும் முக்கியம்.
  • இந்த “நேர்மறையான எண்ணம்” இயேசு கிறுஸ்து சிலுவையில் செய்து முடித்தவற்றில் தொடர்புபடுத்துங்கள்.
  • துயில் எழும்போதே “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு” என்று அற்க்கையிடுங்கள்.
 2. பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுங்கள். எல்லாம் சீற்றமாய் / முழக்கமாய் இருக்கும் போது சாந்தமாய் இருந்து பரிசுத்த ஆவியானவர் சொல்வதற்க்கு செவிக்கொடுங்கள்.
 3. யெசுவா’ வை விசுவாசியுங்கள். ஞானத்தை பயன்ப்படுத்துங்கள். தேவன் உன்மையுள்ளவராய் இருப்பதனால், அவர் மேல் எக்காலத்திலும் நம்பிக்கை வையுங்கள்.
 4. உங்ககளது சுயபுரிதல் மேல் நம்பிக்கை வைக்காமல், உங்கள் பிரயாசங்கள் அனைத்திலும், தேவனுக்கும் அவருடைய பரிசுத்த ஆவியானவர்க்கும் நன்றி செலுத்துங்கள், அப்பொழுது அவர் வழி நடத்துவார்.
 5. தேவனுக்குள் நம்மை தளர்த்துவதும் ஓய்ந்திருப்பதும் நம் மனதல் தேவசமாதானத்தால் நிறைக்கும். மேலும் சமாதானமுள்ளவனே வல்லமையானவன்.

நாம் நம் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை வெகு சிலவற்றை தான் எடுக்கிறோம், உதாரனமாக, திருமணம், நாம் வாழும் ஊர், வீடு, கார் வாங்குவது, படிப்பு, வேலை போன்றவகைகள். இதில் எல்லாவற்றிலும் தேவனிடத்தில் விண்ணப்பத்தை செலுத்துங்கள் அவர் என்ன சொல்லுகிறார் என்பதில் நுடப்மாய் இருங்கள். மக்கள் மத்தியில் பேசும்போது அவர்களின் வார்த்தைகளை ஜாக்கிரதையோடு கவனியுங்கள்.
உதாரணமாக நிங்கள் கார் வாங்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம், அதற்காக தேவனிடத்தில் விண்ணப்பத்தை செலுத்துங்கள் மேலும் தெரிந்தெடுக்கும் போது விற்பனையாளர் என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள், அந்த வேளையில் “யெசுவா” வாகிய கர்த்தர் உங்களுக்கு அங்கு வாங்க வேண்டுமா வேண்டாமா? என்ற புரிந்துகொள்ளுதலை அருளுவார்.

சில கடைகளில் எங்கு வாங்க வேண்டும் என்று நான் குழம்பும்போது நான் மாறாக அந்த வேளையில் ஜெபிப்பேன். மேலும், எங்கு எனக்கு மனிதர்களிடத்தில் தயை கிடைக்குமோ அங்கு கர்த்தராகிய “யெசுவா” வழிநடத்தியதை நான் பார்த்து இருக்கிறேன். அங்கு இருக்கும் பணியாளர்களை கவனிக்கும் போது, அவர்கள் வாக்குவாதம் செய்தாலோ அல்லது சரியாக எனக்கு பதிலளிக்கவில்லை என்றாலோ நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுவேன்.

கவனத்தோடு இருங்கள், மஹா வெற்றியை காண்பீர்கள்!.

Advertisements

1 thought on “குழப்பங்களை மேற்க்கொள்வது எப்படி?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s