வலைபதிவுகள், வாழ்வு குறிப்புகள்

“விரிவடை”

English

think bigger

உங்களை பெரியதாக சிந்திக்கவைக்கவும், உங்களுடைய நம்பிக்கை அமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரவுமே இவைகள்.

நீங்கள் எதை சிந்திக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்; எதை தியானிக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்!

நாம் யாரை தொழுதுக்கொள்கிறோமோ “அவர் ” நமக்கு என்ன செய்யமுடியும்; நமக்குள் என்ன செய்யமுடியும் என்பதை அறிந்து கொள்வது,  நம்மையே உச்சிக்கு கொண்டு சென்று நம்மை முழுவடிவமைப்பு பெற்றுகொள்ளும்படி செய்வது போன்றது அதாவது நீங்கள் யார் உங்கள் தேவன்யார்; என்பதின் தெளிவான பார்வையை பெற்றுக்கொள்வது ஆகும்.

இதைகாண்போம்,

ஆதியாகமம் 12 : 1-3 

  1. கர்த்தர் ஆபிராமை நோக்கி : நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப்புறப்பட்டு, நான் உனக்குக்காண்பிக்கும் தேசத்துக்குப்போ.
  2. நான் உன்னைப்பெரியஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
  3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன் ; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

ஆதியாகமம் 22:17

 17. நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,

நம் தேவனை யாரென்று பாருங்கள். ஓருவர் தன் வாழ்வையையும் மற்றவைகளையும் அற்பனிப்பது வரை காத்திருந்து பிறகு ஆசீர்வதிக்கும் தேவன் அல்ல அவர். ஆனால் அழைப்பதற்கும், நாம் அவரை தேடுவதற்கம் முன்பு நம்மிடத்தில் வருகிற தேவனாகவும் முன்பே அவர் வாக்குதத்தங்களால் ஆசீர்வதித்தும் இருக்கிறார்.

அவர் வாக்குதத்தத்தின் வார்த்தைகளை பாருங்கள். வெறும் ஓரு தேசத்தை அல்ல பெரிய தேசத்தையும், பெரிய பேரையும் வாக்கு தத்தமாக அருளுகிறார்.

உங்களது வாழ்வைக்குறித்ததான எண்ணங்களை இன்று விரிவடைய செய்யுங்கள். நீங்கள் கர்த்தரை விசுவாசிப்பீர்களனால் மகத்துவமான அனைத்தையும் உங்களுக்கு அருள விரும்புகிறார்.

எதை நம்புவது ?

தேவனுடைய குமாரன், இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை / விசுவாசம் வைக்கும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள சகல இருள் நீங்கும்.

இந்த தேவனுடைய வாக்குதத்தை எப்படி பெற்றுக்கொள்வது ?

கலாத்தியர் 3:22

அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

எபிரேயர் 6:17
அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.

நம்புங்கள், இயேசு உங்கள் பாவங்களுக்கு விலைக்கிரயம் செலுத்திவிட்டார். அவர் இரட்சகராக உங்களை அரவணைத்துக்கொள்ள முடியும்; பாவங்களுக்கு மட்டும் அல்ல, எவைகள் எல்லாம் உங்களை அழிக்கிறதோ அவைகள் எல்லாவற்றிலிருந்தும், என்பதை விசுவாசியுங்கள்.

தேவனோடு ஒப்புறவு ஆவதற்காக இயேசு வந்தார் எனபதை விசுவாசியுங்கள். நீங்கள் கிறிஸ்து இயேவோடு இணைந்திருக்கும் போது, உங்களுக்கும் தேவனுக்கும் மத்தியில் யாதொன்றும் இல்லை.

இயேசு மூலமாக, இப்பொழுது தேவன் உங்கள் பரலோக தகப்பனாக இருக்கிறப்படியினால், நீங்கள் தேவனோடு பேசலாம். நீங்கள் அவியில் மறுபடியும் பிறந்து இருக்கிறீர்கள்.

தேவன் உங்களை ஆசீர்வதிக்க விரும்பிகிறார் என்பதை விசுவாசியுங்கள்.

இயேசுவை விசுவாசிப்பதனால் உங்கள் வாழ்வை விரிவடையச் செய்யுங்கள்
விசுவாசிப்பவர்களுக்கே தேவ ஆசீர்வாதம் வந்தடையும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s