எப்படி ?, வலைபதிவுகள், வாழ்வு குறிப்புகள்

காதல் தோல்வியை மேற்கொள்வது எப்படி?

English

Love Failure

“காதல் தோல்வி” தெளிவான புரிந்துகொள்ளுதல்:

காதல் தோல்வி என்றால் என்ன?

ஒருவரது தரத்திற்கு தகுந்ததாக இல்லாமலும் அவரது நெருக்கத்திற்கு உரியவர் என்ற ஸ்தானத்தை இழப்பதும் தான், காதலில் தோல்வியடைவது ஆகும்.

ஒருவர் மீது காதல் வயப்படுவது என்பது நமது மனதின் ஒரு சில கணிப்புகளை கொண்டது. அது ஒருவருடன் எந்த வகையில், சவுகரியமாகவும் மற்றும் அவரோடு இருக்கும் போது எவ்வளவு சந்தோஷத்துடன் இருக்கிறீர்களோ அதை பொருத்தது.

உங்களுடைய நாட்டம் (ஆர்வம்) மற்றும் நீங்கள் விரும்புபவைகள் என்ன என்பதை சரிபார்ப்பீர்கள் என்றால் நீங்கள் ஏன் ஒருவருடன் காதல் வயப்பட்டீர்கள் என்பதை புரிந்துக்கொள்வீர்கள். நம்மில் சிலர் பல காரணங்களால் நமது சிறு வயது முதல் பாதுகாப்பற்றவர்களாக தான் இருக்கிறோம். இதனால் நம் உறவில் பாதுகாப்பை தேடுகிறவர்களாக இருக்கிறோம்.

நமது சமுகத்திலிருந்து மரியாதையையும் கனத்தையும் நாம் எதிர்பார்ப்பதினால் பார்வைக்கு லட்சனமானவராகவும், மிடுக்குடையவராகவும், படித்தவராகவும் தேர்ந்தெடுக்க வைக்கிறது. ஒருவேலை நீங்கள் பிரபலமாக இருக்க விரும்புபவராக இருந்தால், பிரபலமானவருடனோ அல்லது வேறு எந்த துறையிலேயோ திறமை மிக்கவராக இருப்பவருடனே காதல் வயப்பட முனைவீர்கள்.

நீங்கள் ஒருவேலை ஒருவருடைய எதிர்பார்ப்பிற்கு அல்லது தகுதிக்கு குறைந்தவராக இருக்கும் பட்சத்தில் அவரது வாழ்க்கை பயணத்திற்கு உங்களுடன் தொடர முடியாது என்று அவர் முடிவெடுக்கலாம். அவர் உங்களுக்கு மறுப்பு சொல்லும் போது உங்களுக்கு சொல்ல முடியாத மனவேதனை உண்டாகும் அதை தான் நிராகரிப்பு என்று சொல்லுவோம்.

அடையாள நெருக்கடி:

நாம் இந்த காதல் தோல்வியை எதிர்க்கொள்ள முடியாமல் போகிறதற்க்கு உண்டான ஒரே காரணம் தான் இந்த “அடையாள நெருக்கடி”. நாம் யார் என்று நமக்கே தெரிவதில்லை.

நம்முடைய உண்மையான மதிப்பை நாம் புரிந்துக்கொள்வதில்லை. நாம் அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே குறைத்து மதிப்பிடுகிறோம்.

நமக்குள் இருக்கின்ற தனித்தன்மையை ஒரு போதும் புரிந்துக்கொள்ளாமல் மேலும் நம்மை உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் திறமையை / தாலந்துக்களை நாம் புரிந்துக்கொள்வது இல்லை. உடைந்த போன இருதயத்தோடு அல்லது காயப்பட்ட இருதயத்தோடு அநேகர் தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தங்களது வாழ்க்கை பாதையில் முன்னேறிச் செல்லாமல் இருப்பது காதல் தோல்வியால் அல்ல மாறாக தங்களுடைய மதிப்பை என்ன என்று புரிந்துகொள்ளாததினால் தான். நாம் தோற்றுப்போன மற்றும் நிராகரிக்கப்பட்ட பகுதியிலேயே இருக்க முடிவு செய்கிறோம் அதனால் எங்கும் நகராமல், புதியவற்றை எதையும் முயற்ச்சி செய்யாமல், மறுபடியும் ஒரு புதிய தொடக்கத்தை தொடங்காமல் போவதற்கு காரணம் நமக்குள் கிரியை செய்யும் “தோல்வியின் ஆவியே” ஆகும்.

இதை இயேசுவின் வல்லமையான நாமத்தில் தகர்த்துப்போடுவோம்.

தவறான மற்றும் ஒவ்வாத அல்லது பொருந்தாத ஏதோ ஒன்று நமக்குள் இருப்பது என்னவென்றால் தாங்கள் நிராகரிக்கப்பட்ட அல்லது உதாசினம் பண்ணப்பட்ட இடைவிடாத சிந்தனையே.
நீங்கள் இயேசுவை விசுவசிப்பவரானால், நீங்கள் பிதாவாகிய தேவனால் பரலோக குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முழுமையாயும் பரிபூரணமாயும் இருக்கிறீர்கள். உங்களுக்கு எது நல்லது என்பது அவருக்கு தெரியும். உங்களுக்கு பொருத்தமான நபரை உங்கள் வாழ்வில் கொண்டு வருவார்.

ஆத்துமா இணைப்பு:

காதல் தோழ்வியின் வலியின் பின்னால் இருக்கும் மற்றுமொரு ஆவிக்குரிய காரணம் தான் “ஆத்தும இணைப்பு”. நாம் எதெற்க்கெல்லாம் நம் இருதயத்தை கொடுக்கிறோமோ, அவைகளோடு நாம் ஆவியிலும் இணைக்கப்பட்ட ஒரு பிணைப்பு போல செயல்படுகிறது. அந்த பிணைப்பு ஒரு நபராகவோ அல்லது ஒரு பொருளாகவோ இருக்கலாம். எப்பொழுதும் அவர்களையும் அவைகளையும் தியானிப்பது (நினைத்துக் கொண்டே இருப்பது) ஒரு வகையில் ஆராதிக்கும் பொருளாக மாறிவிடுகிறது. மேலும் எதை ஆராதிக்கிறோமோ அவற்றோடு நாம் இணைக்கப்படுகிறோம்.

இந்த ஆத்தும இணைப்பு அவர்களோடு இணைத்துவைத்திருக்கும். அவர்கள் உங்களை புறக்கணித்தாலோ அல்லது விட்டு பிரிந்து சென்றாளோ அந்த இணைப்பை துண்டிக்க உங்களால் முடியாமல் போகும் அது மேலும் வலியையே கொண்டு வரும்.

இதை புரிந்துக்கொள்ளுங்கள், உங்களுடன் ஜெபம் பண்ணுகிறவர்களோடு இணைந்து உங்கள் காதல் தோல்விக்காகவும் ஆத்தும இணைப்பை முறிப்பதற்காகவும் அல்லது உங்கள் ஆவியில் இணைநதிருப்பவரோடு உள்ள ஆத்தும இணைப்பை உடையுங்கள். ஆத்துமாவில் சுதந்தரமாகவும், சிதறுண்ட ஆத்துமாவாக இல்லாமல் முழுமனிதராய் இருங்கள்.

உவப்பு (பாராட்டு) அடிமைத்தனம்:

தெரிந்தோ தெரியாமலோ நமது சிறுவயதிலிருந்து, நாம் அடுத்தவரின் பாராட்டை அல்லது உவப்பை எதிர்பார்ப்பவராக இருக்கிறோம். விழுந்துப்போன இந்த உலகத்தில் எல்லாரும் பாரட்டை எதிர்ப்பார்க்கிறார்கள் ஆனால் கொடுப்பவர்கள் எவரும் இல்லை. இங்கு நிறுத்தி ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

“தேவனுடைய பிள்ளைகளே அடுத்தவர்களை பாராட்டுங்கள், அவைகள் அடுத்தவர்களின் வாழ்க்கையை மாற்றும்.”

நீங்கள் ஒருவருவரை பார்த்து பொறாமை படுகிறீர்களென்றால் அவரை உங்களால் பாராட்டுவோ கைத்தட்டவோ முடியாது. பாராட்டுகளை நாடுபவர்களுக்கு யார் தங்களை மதிக்கிறார்களோ, கனப்ப்டுத்துகிறார்களோ மற்றும் இனிமையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு விழுந்தடித்து செய்வார்கள்.

அந்த மதிப்பு, கனம், இனிமை குறையும் போது, நீங்கள் நிராகரிக்கப்பட்டவரைப் போல உணர்ந்து வேதனையையும், வலியையும் அனுமதித்து உங்கள் வாழ்வை சீரழிப்பீர்கள்.

உங்கள் பெருமை நிலையை, எனது நன்பரே சோதித்து பாருங்கள், உங்களை நீங்களே தாழ்த்துங்கள், கர்த்தராகிய “யெசுவா” உங்களை உயர்த்துவார். அடுத்தவர்களின் பாராட்டையே நம்பி வாழ்பவர்கள் சுருக்கமாக அடிமை ஆனவர்கள் அடுத்தவரின் ஒப்புதலுக்காக காத்திருந்தே அவதிப்படுவார்கள். தவறான நபர்களிடமிருந்து ஒப்புதல் அல்லது பாராட்டை நாடுபவர்கள், எந்த நேரத்திலும் வெடித்து சிதற காத்திருக்கும் வெடிகுண்டை சுமந்து கொண்டிருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களிலிடமிருந்து விலகி இருங்கள்

காதல்ப்பித்து:

தனது காதல் ஏற்று கொள்ளப்படாததால் தங்களையே வெட்டிக்கொண்டு காயப்படுத்திக்கொள்வார்கள். இது தனது காதலர் மேல் உள்ள காதலை வெளிப்படுத்தாது மாறாக தனக்குள் இருக்கின்ற மூடத்தனத்தையும் பலவீனத்தையுமே வெளிப்படுத்தும். தனது காதலரையே மணிக்கணக்காய் உட்கார்ந்து யோசித்து கொண்டிருப்பது அது வேறுவிதமான சிலைவழிபடும் நிலையாகும். இங்கே உங்களை பற்றின அக்கறை இல்லாதவர்களுக்காக உங்கள் பாசத்தையும், ஆற்றலையும் திறனையும் இழந்து கொண்டு இருக்கிறீர்கள்.

அவர் மேலேயே கவனமாய் இருக்கிறீர்கள் ஆனால் அவர் உங்களை அழைக்கவில்லை என்றாலோ அல்லது குறுந்தகவல் வரவில்லை என்றாலோ நீங்கள் உடைந்து போகிறீர்கள் மேலும் நீங்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டாலோ அது தான் ஆத்தும இணைப்பு இருக்கிறது என்பதற்க்கான அறிகுறி. இதை நீங்கள் தகர்த்து எரிய வேண்டும்.

“நிராகரிப்பு” என்னும் மோசமான கோட்டையை கையாளுதல்:

படி 1: நீங்கள் யாருடைய தரத்திற்கு ஏற்ப இல்லாமல் போனாலும் அல்லது நீங்களே வகுத்த தரத்தின்படியே இல்லாமல் போனாலும் எப்படியாக இருந்தாலும் “நீங்கள் தோற்றுப்போனவர் இல்லை”. தோற்றுப்போனேன் என்று உங்களை நீங்களே சொல்லிக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும், ஒருபோதும் உங்களை தோற்றுப்போனேன் என்று சொல்லிக்கொள்ளாதீர்கள். சத்தமாக சொல்லுங்கள் “நான் தோற்றுப்போனவர் அல்ல”

படி 2: நீங்கள் உன்னதமான தேவனுடைய குமாரன் குமாரத்திகள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் மதிப்பை புரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் உங்களுக்காக இயேசு அவரையே கிரயமாக கொடுத்து தீர்த்துவிட்டார். அதினால் நீங்கள் எவ்வளவு மதிக்கப்பட்டவர் என்பதையே அது பறைசாற்றுகிறது. தன்னிடத்திலிருந்த எல்லாவற்றையும் விற்று வாங்கப்பட்ட விலையேறப்பெற்ற முத்து தான் நீங்கள். நீங்கள் ராஜா குடம்பத்து அங்கத்தினர். உங்களுக்குள் இயேசுவின் குருதி பாய்கிறது. நீங்கள் தேவனுடைய குமாரர்கள்.

படி 3: உறவை ஏற்படுத்துவதற்கு முன்பு பரிசுத்த ஆவியானவரின் துணையை நாடுங்கள். அவர் உங்களுக்கு ஏற்ற உறவை காண்பித்து அதை அடையவும் வழி நடத்துவார். இது உத்தரவாதமானது. அவரே உங்கள் வாழ்வின் தவறான உறவுகளை நீக்கிப்போடுவார். அப்படியே நீங்கள் ஒரு உறவை விடப்பிடியாக பிடித்துக்கொண்டு இருக்கிறீர்கள் அது உங்களை சீரழிக்கிறது என்றால் அவர் அந்த உறவில் உள்ள பிரிச்சனைகளை உங்களுக்கு காண்பிப்பார். மேலும் சிலவேளையில் உங்கள் மேல் உள்ள வைராக்கியத்தினாலும் பாதுகாப்புக் கருதி, உங்களை அந்த உறவிலிருந்து பரிப்பார்.

படி 4: அவரை போக விடுங்கள். உங்களை விரும்பவில்லை என்றால், அவர் பின்னால் செல்லாதீர்கள். இந்த கொள்கை உங்கள் இருதயவலியிலிருந்து காப்பாற்றும். எப்படியாக இருந்தாலும் அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்வது இல்லை பிறகு ஏன் நேரத்தை விரையம் செய்ய வேண்டும். உங்களுடனே பேசுங்கள், இதிலிருந்து விலகி செல்ல பிதாவாகிய தேவனோடு கேளுங்கள். அவர் செல்லட்டும், அவருக்கு பிரியா விடை கொடுத்து ஒரு புதிய வாழ்க்கையை தேடுங்கள்.

படி 5: தேவன் உங்களுக்கு வழிகள் உண்டு பண்ணி தருவாராக. நீங்களே உறவை ஏற்படுத்த முயலாதீர்கள், தேவனே உங்களுக்கு வழிகள் உண்டு பண்ணுவாராக. அவரே உங்களை வழி நடத்துவாராக. அவர் சாமர்த்தியமான தந்தை. அவர் உங்களுக்கான சரியான தருனமும், சரியான நபரையும் அறிந்திருக்கிறார். அதனால் உங்கள் ஆற்றலையும் படைப்பாற்றலையும் வீணாக்காதீர்கள்.

படி 6: தேவன் உங்களை நேசிக்கிறார் என்பதை நினைவு கூறுங்கள். அவரது அன்பில் நிலைத்திருங்கள். விசுவாசத்தால் தேவ அன்பை பழகுங்கள். அவர் முடியைகூட எண்களிடப்பட்டு எண்ணி வைத்திருக்கிறார், அவ்வளவு உங்களை நேசிக்கிறார். உங்கள் பரம அப்பா சிறு நுட்பமானவைகளையும் விடாமல் உங்களுடன் அக்கறையுடன் இருக்கிறார்.

படி 7: தேவ தயவு உங்களுக்காக வேலை செய்ய விசிவாசியுங்கள். நீங்கள் என்னுவதற்கும் நினைப்பதற்கும் மேலாக அவர் உங்களுக்கு கொடுக்க வல்லவர். அதனால் அவர் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்றவரை கொண்டு வரும் வறை அவருக்காக காத்திருங்கள். அனுதினமும் அடிக்கடி “நான் மிகவும் தேவனுடைய தயவை பெற்றிருக்கிறேன்” என்று அறிக்கையிடுங்கள். அவரே என் வாழ்க்கையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறவர்.

ஏற்றுக்கொள்தலும் பெற்றுக்கொள்தலும்:

இயேசு சிலுவையில் தனது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் முடித்திருக்கிறார். அவர் நம்மை, பிதாவாகிய தேவனுக்கு முன்பு நிறுத்தும்படியாக செம்மையாக்கினார். செம்மையான தகுதியை பெற்றுக்கொள்ள நீங்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை, நீங்கள் சம்பாதிக்க வேண்டியது இல்லை, அதை விசுவாசித்து பெற்றுக்கொள்ளுங்கள்.

பிதாவாகிய தேவன் உங்களை செம்மையற்றவராக காண்பதில்லை மாறாக உங்களை அவரது குமாரனாகவே பார்க்கிறார். அவரது ஆவியையே உங்களுக்கு ஊற்றினார்.

 

Advertisements

1 thought on “காதல் தோல்வியை மேற்கொள்வது எப்படி?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s