ஆடியோ பக்கங்கள், வலைபதிவுகள், வாழ்வு குறிப்புகள்

நான் தேவனுடைய குமாரன்.

விசுவாச அறிக்கை

original

 

நான் தேவனுடைய குமாரன்.
நான் தேவனுடைய வித்தில் பிறந்திருக்கிறேன்.
நான் தேவனுடைய ரூபத்திலும் குணாதிசியத்திலும் படைக்கப்பட்டிருக்கிறேன்.
கண்களுக்கு புலப்படாத தேவனுடைய தற்சுரூபமாகவே இயேசு இருக்கிறார். நான் இயேசுவை போலவே இருக்கிறேன்.
நான் இயேசுவையே பின்பற்றுகிறேன்.
இயேசுவே எனது வழி. இயேசுவே எனது சத்தியம். இயசுவே எனது ஜீவனாக இருக்கிறார்.
நான் இயேசுவுக்கென்று, இயேசு மூலமாக, இயேசுவைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறேன்.
இயேசு தான் என்னுடைய மாதிரி. இயேசுவே என்னுடைய நாயகர். அவரே என் போற்றுதலுக்கு உரியவர்.
நான் இயேசுவை வணங்குகிறேன்.
இயேசு என்னுடைய சிறந்த நண்பர். என்னுடைய தலைசிறந்த தீர்க்கத்தரிசி, என்னுடைய மருத்துவர். என்னுடைய மூத்தசகோதரர்.
இயேசு எனக்குள் வாழ்ந்துக்கொண்டுருக்கிறார்.
பரலோகப்பிதா எனக்குள் வாழ்ந்துக்கொண்டுறிக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் எனக்குள் குடிக்கொண்டுள்ளார்.
நான் திரித்துவத்தின் சந்தோஷமாய் இருக்கிறேன்.
தேவப்பிதா என்னில் மகிழ்ச்சி அடைகிறார்.
நான் அவருடைய நேசக்குமாரன்.
என்னை இயேசுவை போலவே பார்க்கிறார்.
தேவப்பிதாவிற்கு முன்பாக என்னையும் இயேசுவையும் ஒன்றாகவே பார்க்கிறார்.
தேவப்பிதா இயேசுவை நேசிப்பது போல என்னையும் நேசிக்கிறார்.
அவர் என் பாவங்களை கணக்கிட்டு கொண்டிருக்கவில்லை.
அவர் என் பாவங்களை நினைவில் வைப்பதில்லை.
அவர் என்னை குமாரனாக, நேசக்குமாரனாக நினைவுக்கூறிகிறார்.
நான் தேவப்பிதாவின் பிரசன்னத்தை அனுபவிக்கின்றேன்.
இயேசு இல்லாமல் என்னால் எதுவும் செய்ய இயலாது.
இயேசுவோடு எல்லாவற்றையும் செய்ய என்னாலே ஆகும்.

 

குறிப்பு:
இந்த விசுவாச அறிக்கையை ஆண்-பெண் இருபாலரும் சொல்லலாம். பெண்கள் இதை விசுவாச அறிக்கை செய்யும் போது “தேவனுடைய குமாரன்” என்ற இடத்தில் ‘தேவனுடைய குமாரத்தி’ என்று மாற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை “தேவனுடைய குமாரன்” என்றே சொல்லலாம், அதில் தவறு கிடையாது. ஏன் என்றால் நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அது உடலளவில் மட்டுமே பொருந்தும், உண்மையில் நாம் ஆவியில் மறுபடியும் பிறந்திருக்கிறோம் மேலும் ஆவிக்கு ஆண் என்றோ பெண் என்றோ பிரிவு கிடையாது என்பது நினைவில் கொள்க. ஏன் என்றால் இயேசுவிற்குள் நாம் அனைவரும் ஒன்றே. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நாம் இயேசுவிற்கு மணவாட்டி தானே, அதே போல நாம் அனைவரும் கிறிஸ்துவுக்குள் நாம் உன்னதமான தேவனுடைய குமாரர்கள் தான். அதினால் பெண்களும் “நான் தேவனுடைய குமாரன்” என்றே தைரியமாக உற்சாக மனதுடன் உள்ளத்தில் யாது ஒரு இடறலும் இல்லாமல் நம்பிக்கையோடே உள்ளத்தின் ஆளத்திலிருந்து அதிகாரத்துடன் சொல்லுங்கள்.

இந்த அறிக்கை உங்கள் இருதயத்தில் பதிய தக்கதாக மறுபடியும் கேட்டு வாயைவிட்டு சொல்லுங்கள், அப்பொழுது தான் உங்கள் இருதயம் சத்தியத்தால் நிரம்பும். அப்பொழுதான் நம்முடைய நெருக்கடியான சூழலில் நான் “தேவனுடைய குமாரன்” என்ற சத்தியமாகவே மாறி இருப்போம்.

சத்தியம் உரைத்து பொய்யை கலைந்து “சத்தியமாகவே” வாழ்வோம்.

“இயேசுவே சத்தியம்”

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s